சார்பெழுத்துகள்
1. சார்பெழுத்துகள் என்றால் என்ன?
தனித்து இயங்கும் ஆற்றலின்றி முதலெழுத்தைச் சார்ந்து வருபவை
சார்பெழுத்துகள் எனப்படும்.
2. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை
ë உயிர்மெய்
ë ஆய்தம்
ë உயிரளபெடை
ë ஒற்றளபெடை
ë குற்றியலுகரம்
ë குற்றியலிகரம்
ë ஐகாரக்குறுக்கம்
ë ஒளகாரக்
குறுக்கம்
ë மகரக்குறுக்கம்
ë ஆய்தக்குறுக்கம்
நிரப்புக
1. சார்பெழுத்துகள்
பத்து வகைப்படும்
2. குறுக்கம் சார்பெழுத்துகளில்
ஒன்று
3. சார்பெழுத்துகளில்
ஒன்று ஆய்தம்.
1. உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?
உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் சேர்ந்து பிறக்கின்ற எழுத்து
உயிர்மெய் எழுத்து ஆகும்.
2. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216 (இருநூற்று பதினாறு).
3. ஆய்த எழுத்து என்றால் என்ன?
மூன்று புள்ளி வடிவமுடைய எழுத்து ஆய்த எழுத்து ஆகும்.
4. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள்
முப்புள்ளி
முப்பாற்புள்ளி
தனிநிலை
அஃகேனம்
No comments:
Post a Comment