Sunday, June 16, 2019

இலக்கணம் – மாத்திரை


இலக்கணம் – மாத்திரை
1.   மாத்திரை என்றால் என்ன?
எழுத்துகளை ஒலிப்பதற்கு ஆகும் கால அளவு மாத்திரை எனப்படும்.

2.   ஒரு மாத்திரைக்குரிய காலஅளவு யாது?
இயல்பாகக் கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம் ஒரு மாத்திரைக்குரிய கால்அளவு ஆகும்.

3.   உயிர்க் குறிலுக்கு, உயிர்மெய்க் குறிலுக்கு எத்தனை மாத்திரை?
உயிர்க் குறிலுக்கு, உயிர்மெய்க் குறிலுக்கு ஒரு மாத்திரை.

4.   உயிர் நெடிலுக்கு எத்தனை மாத்திரை?
உயிர் நெடிலுக்கு இரண்டு மாத்திரை.

5.   உயிர்மெய் நெடிலுக்கு எத்தனை மாத்திரை?
உயிர்மெய் நெடிலுக்கு இரண்டு மாத்திரை.

6.   மெய் எழுத்திற்கு எத்தனை மாத்திரை?
மெய் எழுத்திற்கு அரை (1/2) மாத்திரை.

7.   ஆய்த எழுத்திற்கு எத்தனை மாத்திரை?
ஆய்த எழுத்திற்கு அரை (1/2) மாத்திரை.

8.   தமிழ் மொழி மாத்திரையை அளவிட்டுக் கூறுக.
த – மி – ழ் – மொ – ழி
1  - 1  - 1/2-  1   -  1  - 4 ½ மாத்திரை

No comments:

Post a Comment