முதலெழுத்துகள்
1. முதலெழுத்துகள் என்றால் என்ன?
மொழிக்கு முதற்காரணமாகவும் பிற எழுத்துகள் தோன்றவும் இயங்கவும்
காரணமாக இருக்கும் எழுத்துகள் முதலெழுத்துகள் ஆகும்.
2. முதலெழுத்துகள் யாவை?
உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும்
ஆகிய முப்பது எழுத்துகள் முதலெழுத்துகள் ஆகும்.
3. முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?
முதலெழுத்துகள் மொத்தம் முப்பது (30).
4. கங்கை
என்ற சொல்லில் உள்ள முதலெழுத்து ங் ஆகும்.
5. ஆடு
என்ற சொல்லில் உள்ள முதலெழுத்து ஆ ஆகும்.
1. உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
உயிர் எழுத்துகள் மொத்தம் 12.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
2. உயிர் எழுத்துகள் எத்த்னை வகைப்படும்? அவை யாவை?
உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை உயிர்குறில், உயிர்நெடில்.
3. உயிர்குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?
உயிர்குறில் எழுத்துகள் மொத்தம் ஐந்து. அவை அ, இ, உ, எ, ஒ
4. உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் ஏழு. அவை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ,
ஓ, ஒள.
5. மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?
மெய்யெழுத்துகள் மொத்தம் பதினெட்டு (18). அவை க், ங், ச்,
ஞ், ட், ண், த், ந், ப், ம் ய், ர், ல், வ். ழ், ள், ற், ன்.
6. மெய்யெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும். அவை வல்லினம், மெல்லினம்,
இடையினம்.
7. வல்லின மெய்கள் எத்தனை? அவை யாவை?
வல்லின மெய்கள் ஆறு. அவை க், ச், ட், த், ப், ற்
8. மெல்லின மெய்கள் எத்தனை? அவை யாவை?
மெல்லின மெய்கள் ஆறு. அவை ங், ஞ், ண், ந், ம், ன்
9. இடையின மெய்கள் எத்தனை? அவை யாவை?
இடையின மெய்கள் ஆறு. அவை ய், ர், ல், வ், ழ், ள்
No comments:
Post a Comment