பொது இடங்கள்
நூல் நிலையம்

படத்தில் காண்பது நூல்நிலையம்.
நூல் நிலையத்தில் புத்தகங்கள் அழகாக வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்
இங்கு அமைதியாகப் படிக்க வேண்டும்.
பலதுறை நூல்கள் இங்கு இருக்கும்.
நூல்களைப் படிப்பதால் நம் அறிவு வளரும்.
கடற்கரை

படத்தில் காண்பது கடற்கரை.
கடற்கரை ஒரு பொழுதுபோக்கு இடமாகும்.
கடற்கரையில் படகுகள் கடைகள் காணப்படும்.
கடற்கரையில் குளிர்ந்த காற்று வீசும்.
கடற்கரையின் மணலில் சிப்பி, சங்கு போன்றவை காணப்படும்.
பேருந்து நிலையம்

படத்தில் காண்பது பேருந்து நிலையம்.
பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வரிசையாக நிற்கும்.
நாம் ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல பேருந்து
பயன்படுகிறது.
பேருந்தில் செல்ல பயணச்சீட்டு வாங்க வேண்டும்.
பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் இருப்பர்.
கோவில்

படத்தில் காண்பது கோவில்
இங்கு இறைவனது சிலைகள் இருக்கும்.
இங்கு பக்தர்கள் வந்து இறைவனை வணங்குவர்.
இங்கு பூஜைகள், திருவிழாக்கள் நடைபெறும்..
பள்ளிக்கூடம்

படத்தில் காண்பது பள்ளிக்கூடம்
இங்கு மாணவ மாணவியர் கல்வி கற்க வருவர்.
இங்கு ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பர்.
பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகளும் மைதானமும் இருக்கும்.
பூங்கா

படத்தில் காண்பது பூங்கா
பூங்காவில் மரங்கள், செடிகள் இருக்கும்
பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்வர்.
பூங்கா ஒரு பொழுது போக்கு இடமாகும்.
No comments:
Post a Comment