Sunday, August 4, 2019

அறிவின் திறவுகோல்


அறிவின் திறவுகோல்
பிரித்து எழுதுக
1.   அறிவியலறிஞர் -     அறிவியல் + அறிஞர்
2.   பேருண்மை           -     பெருமை + உண்மை
3.   மரப்பலகை      -     மரம் + பலகை
4.   நீராவி          -     நீர் + ஆவி
5.   புவியீர்ப்பு       -     புவி + ஈர்ப்பு

சேர்த்து எழுதுக
1.   பத்து + இரண்டு  -     பன்னிரண்டு
2.   சமையல் + அறை     -     சமையலறை
3.   இதயம் + துடிப்பு      -     இதயத்துடிப்பு

பொருள் கூறு
1.   வேகமாக  -     விரைவாக

விடையளி
1.   மனிதனின் சிந்தனையால் எது வளரத் தொடங்கியது?
மனிதனின் சிந்தனையால் அறிவியல் வளரத் தொடங்கியது.

2.   ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிய எந்த நிகழ்ச்சி காரணமாக இருந்தது?
மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததும், அது ஏன் மேலே போகாமல் கீழே விழுகிறது என்ற சிந்தனையே ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிய காரணமான நிகழ்ச்சி ஆகும்.

3.   ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு காரணமான நிகழ்வு யாது?
பூங்காவில் சீசா ஒன்றின் மரப்பலகையின் ஒரு முனையில் குண்டூசியால் ஒரு சிறுவன் கீற மறுமுனையில் மற்றொரு சிறுவன் காதை வைத்து அதன் ஒலியைக் கேட்டான். இந்த நிகழ்வே ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமான நிகழ்வு ஆகும்.

4.   நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ்வாட்.

5.   அறிவியலறிஞர்களிடம் உற்று நோக்கும் திறன் உள்ளது என்பதை எடுத்துக் காட்டுக.
மூடியிருந்த கொட்டில் நீர் கொதித்துக் கொண்டிருந்தது. அப்போது மூடியை தள்ளிவிட்டு நீராவி வெளிவரத் தொடங்கியது. இதைக் கண்ட ஜேம்ஸ்வாட் நீராவி எஞ்ஜினையும் புகைவண்டியையும் கண்டுபிடித்தார்.


பொருத்துக
1.   ஐசக் நியூட்டன்       -     புவியீர்ப்பு விசை
2.   ஜேம்ஸ் வாட்         -     நீராவி இயந்திரம்

3.   இரேனே லென்னக்    -     ஸ்டெதஸ்கோப்

9 comments: