Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Saturday, March 21, 2020

பழமொழிகள்

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

இக்கரைக்கு அக்கரை பச்சை

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

யானைக்கும் அடி சறுக்கும்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

ஆழம் தெரியாமல் காலை விடாதே

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்

ஆடிப் பட்டம் தேடி விதை

ஏரைத் தேடின் சீரைத் தேடு

Sunday, August 4, 2019

படம் இங்கே! பழமொழி எங்கே?


படம் இங்கே! பழமொழி எங்கே?
பிரித்து எழுது
1.   மரப்பொந்து      -     மரம் + பொந்து
2.   அக்கரை        -     அ + கரை
3.   மணியோசை    -     மணி + ஓசை
4.   தேனிசை        -     தேன் + இசை

சேர்த்து எழுதுக
1.   சூறை + காற்று       -     சூறைக்காற்று
2.   கண் + இமைக்கும்    -     கண்ணிமைக்கும்
3.   அமர்ந்து + இருந்து    -     அமர்ந்திருந்து

பொருத்தமான சொல்லில் நிரப்புக
1.   யானைக்கும் அடி சறுக்கும்
2.   விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
3.   ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு
4.   ஆழம் தெரியாமல் காலை விடாதே
5.   ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

விடையளி
1.   பழமொழி என்பது யாது?
நம் முன்னோர்கள் தம் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகளை பழமொழி என்பர்.

2.   விடுகதை என்றால் என்ன?
ஒரு புதிருக்கு விடை காண்பது விடுகதை ஆகும்.

3.   கிளியைப் பழமொழிக்கிளி என அழைக்கக் காரணம் என்ன?
மாந்தோப்பில் கிளி காட்டும் படத்திற்கு சரியான பழமொழியை சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காயை பறித்துப்போடும். அதனால் அதை பழமொழிக்கிளி என அழைப்பர்.

4.   இப்பாடத்தில் நீ அறிந்துக் கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடு.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
இக்கரைக்கு அக்கரை பச்சை.
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே