Showing posts with label உணர்ச்சி. Show all posts
Showing posts with label உணர்ச்சி. Show all posts

Saturday, March 21, 2020

நிறுத்தக் குறிகள்

நிறுத்தக் குறிகள்
காற்புள்ளி
,
ஒரு தொடரில் பல பொருள்கள் அடுக்கி வரும்போது குறிக்கப்படுவது. மா, பலா, வாழை ஆகியவற்றை முக்கனி என்பர்.
அரைப்புள்ளி
;
ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வரும்போது, ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது. காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலை பிடித்தல் தாழ்மை
முற்றுப்புள்ளி
.
 ஒரு தொடர் முடிவு பெற்றதனை உணர்த்துவதற்காகக் குறிக்கப்படுவது. (எ.கா.) எனக்கு மட்டைப்பந்து விளையாடப் பிடிக்கும்.
வினாக்குறி
?
ஒரு தொடர் வினாப்பொருளைத் தரும்போது குறிக்கப்படுவது (எ.கா.) அப்பா என்னால் பறக்க முடியாதா?
உணர்ச்சிக்குறி
!
ஒரு தொடர் உணர்ச்சியை வெளிப்படுத்துமானால் குறிக்கப்படுவது (எ.கா.) என்னே! கங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் அழகு!
ஒற்றை மேற்கோள்குறி
 
ஒரு தொடரில் நூல் பெயர், கட்டுரை பெயர், பழமொழி முதலியன வந்தால் குறிக்கப்படுவது (எ.கா.) பிரபஞ்சனின் படைப்புகளுள் ‘வானம் வசப்படும்’ என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.
இரட்டை மேற்கோள் குறி
 
ஒரு தொடரில் ஒருவர் கூறியதை நேர்கூற்றாகக் கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகப் பயன்படுத்தும் போதும் குறிக்கப்படுவது. (எ.கா.) “கண்வனப்பு கண்ணோட்டம்” என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது.