Showing posts with label CLASS. Show all posts
Showing posts with label CLASS. Show all posts

Tuesday, June 4, 2019

துணைப்பாடம்


துணைப்பாடம்
விடையளி
1.   ஒரு தேசத்தின் சுதந்திரத்தையும் கெளரவத்தையும் பாதுகாக்க எப்படிப் பயணிக்க வேண்டும்?
ஒரு தேசத்தின் சுதந்திரத்தையும் கெளரவத்தையும் பாதுகாக்க சுயதியாகம் மற்றும் சுயசார்புப் பாதையில் உள்ள தடைகளைத் தகர்த்து உறுதியாகப் பயணிக்க வேண்டும்.

2.   நாரதர் காட்டிற்குச் சென்றபோது யாரைச் சந்தித்தார்?
நாரதர் காட்டிற்குச் சென்றபோது இரண்டு யோகிகளைச் சந்தித்தார்.

3.   ஜிஜாபாய்க்கு சிவாஜி கொடுத்த வாக்கு யாது?
கொண்டானா கோட்டையை வென்று தருவதாக ஜிஜாபாய்க்கு சிவாஜி வாக்குக் கொடுத்தார்.

4.   சீருடை அணிந்து வீரன் கூறியது யாது?
சீருடை அணிந்து இராணுவ வீரன் நான் வீட்டிற்குச் செல்லப் போவது இல்லை. போர்களத்திற்குச் செல்கிறேன் என்றான்.


1. மூதாட்டி தனது வலது கையை எத்தனை ஆண்டிற்குப் பயன்படுத்தவில்லை?
மூதாட்டி தனது வலதுகையை கடவுளை வழிபட ஓராண்டிற்குக் காணிக்கையாக்கிப் பயன்படுத்தவில்லை..

2.   இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் யாரை அழைத்து வந்தாள்?

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தனது குழந்தையை அழைத்து வந்தாள்.

1.   சைதன்ய மகாபிரபு எதில் வல்லவர்?
சைதன்ய மகாபிரபு வாதத்திறமையில் வல்லவர்.

2.   தேசத்தின் வலுவான அடையாளம் என்ன?

அனைவரையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். சகோதரத்துவத்தை பொழிய வேண்டும். இவையே தேசத்தின் வலுவான அடையாளம் ஆகும்.