Showing posts with label பிரித்து எழுதுக. Show all posts
Showing posts with label பிரித்து எழுதுக. Show all posts

Thursday, July 11, 2019

கல்விச் செல்வமும், பொருட்செல்வமும்


கல்விச் செல்வமும், பொருட்செல்வமும்
பிரித்து எழுதுக
1.   பணமென்றால் – பணம் + என்றால்
2.   தொலைக்காட்சி – தொலை + காட்சி
3.   காரணமாகின்றது – காரணம் + ஆகின்றது

சேர்த்து எழுது
1.   பொருள் + செல்வம் – பொருட்செல்வம்
2.   பழமை + மொழி – பழமொழி
3.   பொருள் + இல்லார்க்கு – பொருளில்லார்க்கு
4.   நன்மை + வழி - நல்வழி

நிரப்புக
1.   இம்மை என்னும் சொல் குறிக்கும் பொருள் இப்பிறப்பு
2.   வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் செழுமை
3.   பசி வந்திட பத்தும் பறந்து போகும்.
4.   கேடில் விழுச்செல்வம் கல்வி
5.   பொருளால் நம் வாழ்வு வளம் பெறும்.

விடையளி
1.   களர் நிலத்துக்கு ஒப்பார் யார்?
கல்வி கற்காதவர் களர் நிலத்துக்கு ஒப்பாவர்.

2.   கள்வரால் கவர்ந்து செல்லக்கூடியது எது?
கள்வரால் கவர்ந்து செல்லக்கூடியது பொருட்செல்வம் ஆகும்.

3.   கல்விச்செல்வம் மிகவும் சிறந்த செல்வம் என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை உம் சொந்த நடையில் எழுதுக.
ë  கல்வி கற்காதவர் களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
ë  கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ë  கல்விச்செல்வமே இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது.
ë  இவையே மலர்விழி கூறிய காரணங்கள் ஆகும்.

4.   பொருட்செல்வமே அவசியம் என்பதற்கு தமிழரசி கூறிய காரணங்களைத் தொகுத்து எழுது.
ë  பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை.
ë  கல்வி கற்பதற்கும், வசதியான வாழ்விற்கும் பணம் தேவை.
ë  இவையே தமிழரசி கூறிய காரணங்கள் ஆகும்.