Showing posts with label கண். Show all posts
Showing posts with label கண். Show all posts

Wednesday, July 3, 2019

மொழிப் பயிற்சி உடல் உறுப்புகள்


மொழிப் பயிற்சி
உடல் உறுப்புகள்
கண்
ஐம்பொறிகளுள் ஒன்று கண்
கண்களின் மூலம் நாம் அனைத்தையும் பார்க்க முடியும்
கண்களைத் தூயநீரால் தினமும் நாம் சுத்தம் செய்ய வேண்டும்.
வைட்டமின் சத்துள்ள உணவை உண்பது கண்களுக்கு மிகவும் நல்லது.
கண்களை விழி என்றும் கூறுவர்.

காது
ஐம்பொறிகளுள் ஒன்று காது.
இதனை செவி என்றும் கூறுவர்.
பிறர் பேசுவதை நாம் காதுகளால் கேட்கலாம்.
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பது வள்ளுவர் வாக்கு.
நாம் காதுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மூக்கு
ஐம்பொறிகளுள் ஒன்று மூக்கு
இதனை நாசி என்றும் சுவாசிக்க மூக்கு உதவும்.
மூக்கில் இரு துவாரங்கள் உள்ளன.
மூக்கினால் பொருட்களின் மணத்தினை உணர்கிறோம்.

வாய்
ஐம்பொறிகளுள் ஒன்று வாய்
பேசுவதற்கும், உண்பதற்கும் வாய் பயன்படுகிறது.
நம் உடலுக்குத் தேவையான உணவை வாயின் மூலம் பெறுகிறோம்.
தினம் இருமுறை பல்துலக்கி வாயைத் துய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கை
நமது உடல் உறுப்புகளுள் ஒன்று கை.
நமக்கு இரண்டு கைகள் உள்ளன.
ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன.
கைகளால் நாம் அனைத்து செயல்களையும் செய்யமுடியும்.

கால்
நமது உடல் உறுப்புகளுள் ஒன்று கால்
நமக்கு இரண்டு கால்கள் உள்ளன.
கால்களின் மூலம் நாம் நிற்கவும், நடக்கவும் முடியும்.
ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்குச் செல்லமுடியும்.